×

பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசின் விளையாட்டு மையங்கள் மற்றும் விடுதிகளில் சேர்வதற்கு வரும் 8ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
2024-25ம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 7,8,9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 10ம் தேதி மாணவர்களுக்கும், 11ம் தேதி மாணவிகளுக்கும் காலை 7 மணியளவில் திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் வரும் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துபந்து ஆகிய போட்டிகளும், கிரிக்கெட் மற்றும் நீச்சல் போட்டி மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர்கைக்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் நாளை (6ம் தேதி) காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம், குத்துச்சண்டை, கபடி மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், கூடைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு நேருஉள்விளையாட்டரங்கத்திலும், ஹாக்கி விளையாட்டிற்கான தேர்வு சென்னை எம்.ஆர்.கே ஹாக்கி விளையாட்டரங்கத்திலும் நடைபெறவுள்ளது.

இதை தவிர கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வாள் விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், நீச்சல் விளையாட்டிற்கான தேர்வு சென்னை வேளச்சேரி நீச்சல் குளவளாகத்தில் நடைபெறவுள்ளது. இதை தவிர முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 6, 7 மற்றும் 8ம் வகுப்பில் சேருவதற்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 7ம் தேதி காலை 7 மணியளவில் தடகளம், குத்துச்சண்டை, மேசைப்பந்து, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னை ஜவஹர்லால் நேருவிளையாட்டரங்கத்திலும், இறகுபந்து, வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு நேரு பூங்கா விளையாட்டரங்கத்திலும், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் விளையாட்டுகளுக்கான தேர்வு வேளச்சேரி நீச்சல் குளவளாகத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கான தேர்வு நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்திலும், சைக்கிளிங் விளையாட்டிற்கான தேர்வு செங்கல்பட்டு மேலகோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகவளாகத்திலும் நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பளுதூக்குதல் போட்டி 7ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தகவல் பெற மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசிஎண் 04366-290620-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SB ,Tiruvarur ,Collector ,Charu ,SP ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...